நாய் குறுக்கே வந்ததால் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தேனி அருகே நாய் குறுக்கே வந்ததால் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்;

Update:2022-07-22 19:00 IST

தேனி அருகே மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜ் (வயது 70). கூலித்தொழிலாளி. கடந்த 5-ந்தேதி இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு நாய் குறுக்கே வந்ததால், ஸ்கூட்டரில் இருந்து ராஜ் தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மகன் குழந்தைவேல் கொடுத்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்