நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 12 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் இருதரப்பினர் மோதிலில் ஈடுபட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-09-07 23:52 IST

தரகம்பட்டி அருகே உள்ள செங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 41). அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (42). இவர்களுக்கு இடையே சுமார் 11 ஏக்கர் விவசாய நிலத்தை பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.இந்தநிலையில் நேற்று முன்தினம் பாலவிடுதி பஸ் நிறுத்தம் அருகே நிலத்தகராறு தொடர்பாக செல்வராஜ் மற்றும் பாலகிருஷ்ணன் தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி செல்வராஜ் மற்றும் அவரது தரப்பினை சேர்ந்த சக்திவேல், மாணிக்கம், முத்துலட்சுமி, குமரவேல், நவீன்குமார், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தரப்பினை சேர்ந்த பாலமுருகன், அழகம்மாள், வளர்மதி, கார்த்திகேயன், சுப்பிரமணி ஆகிய 12 பேர் மீது பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்