பா.ஜ.க. 9 ஆண்டு சாதனை விளக்க நிறைவு விழா

திருக்கோவிலூர் அருகே பா.ஜ.க. 9 ஆண்டு சாதனை விளக்க நிறைவு விழா;

Update:2023-07-08 00:15 IST

திருக்கோவிலூர்

விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருக்கோவிலூர் அருகே உள்ள மனம்பூண்டி கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க நிறைவு விழா மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி பயனாளிகள் அரங்க கூட்டம் மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீ.ஏ.டி.கலிவரதன், பொதுச்செயலாளர்கள் முரளி, தங்கம், பொருளாளர் குமாரசாமி, மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் சரண்யாதிருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் இடிமின்னல் தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மண்டல் தலைவர்கள் ரவிச்சந்திரன், செல்வக்குமார், அரிகிருஷ்ணன், பத்ரிநாராயணன், வெங்கடேசன், தென்னரசு, மாவட்ட செயலாளர்கள் புவனேஸ்வரி, ராமலிங்கம் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்