மின் கட்டண உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில், பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில், பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-07-23 18:07 IST

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகோரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் நாஞ்சில் பாலு, பாலாஜிகுருக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில விவசாய அணி துணை தலைவர் பண்ணைவயல் இளங்கோ கலந்து கொண்டு பேசினார். தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். மின் கட்டண உயர்வுக்கு காரணம் மத்திய அரசுதான் என்று கூறுவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் கோவி.சேதுராமன், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், நிர்வாகிகள் அழகிரி, மோடி கண்ணன், ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் வினோத் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்