சாலையை சீரமைக்க கோரி பா.ஜனதாவினர் நூதன போராட்டம்
சாலையை சீரமைக்க கோரி பா.ஜனதாவினர் நூதன போராட்டம்;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் அருகில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கடந்தசில நாட்களாக சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதற்கிடையில் விபத்தை தடுக்க போலீசார் தடுப்பு வைத்து உள்ளனர். இந்த நிலையில் பா.ஜனதா கட்சியினர் சாலை பழுதடைந்த இடத்தில் வாழைக்கன்றை நட்டு வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து கிழக்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் சாலை பழுதடைந்து காணப்படுவதால் விபத்துக்கள் நடைபெறுகிறது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சாலையை சீரமைக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதாவினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த இடத்தை மண்ணை கொட்டி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.