ராமேசுவரத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம்...!
ராமேசுவரத்தில் நேற்று வீசிய பலத்த சூறாவளி காற்றால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தது.;
ராமேஸ்வரம்,
ராமேசுவரத்தில் நேற்று நள்ளிரவு வீசிய பலத்த சூறாவளி காற்றால் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர கயிறுகள் அறுந்து ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளன.
இதில் 3 படகுகள் அதிக அளவில் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று காலை மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் படகுகளில் தயாரான நிலையில் சேதமான படகை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் அதிகமான படகுகள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.