ஊட்டி மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி

பெரியார் பிறந்த நாளையொட்டி ஊட்டி மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி நடந்தது.;

Update:2023-09-18 02:15 IST

ஊட்டி

நீலகிரி மாவட்ட மைய நூலகம் மற்றும் பாவேந்தர் இலக்கிய பேரவை சார்பில், 145-வது பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட மைய நூலகம் சார்பில் புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை வாசகர் வட்ட உறுப்பினர் மெடில்டா திறந்து வைத்தார்.

இதில் பெரியார் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்கள் இடம்பெற்று உள்ளன. இதனை நூலகத்திற்கு வந்தவர்கள் பார்வையிட்டனர். அதன் பின்னர் பெரியாரின் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மாவட்ட மைய நூலகர் சிவாஜி, புலவர் சோலூர் கணேசன், கவிஞர்கள் ஜனார்தனன், நீலமலை ஜேபி, நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்