மதுபாட்டில்கள் விற்றவர் கைது

Update:2023-06-29 00:15 IST

ஏரியூர்

பெரும்பாலை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது57). இவர் மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக பெரும்பாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்