பரமத்திவேலூர் குழந்தைகள் மையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

Update:2023-08-03 00:30 IST

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. பரமத்தி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி கலந்து கொண்டு குழந்தை பெற்ற தாய்மார்களிடம் தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம், தாய்ப்பாலின் சத்துக்கள் குறித்து எடுத்து கூறினார்.

மேலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உணவு முறை மற்றும் ஆரோக்கிய முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்கினார். விழாவில் சத்துள்ள காய்கறி பொருட்கள் மற்றும் பழ வகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இதில் பரமத்தி வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், குழந்தைகள் மைய பணியாளர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்