குரங்குகளை பிடிக்க கூண்டு வைப்பு

நெலாக்கோட்டையில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

Update: 2023-09-02 22:00 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பஜாரில் மளிகை, காய்கறி கடைகள், ஓட்டல்கள் உள்ளன. இதற்கிடையே குரங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவை கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள காய்கறிகள், உணவு பொருட்களை தின்று சேதப்படுத்துகின்றன.

மேலும் வீடுகளின் மேற்கூரை வழியாக உள்ளே புகுந்து, சமைத்த உணவுகளை தின்று நாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று பிதிர்காடு வனத்துறையினரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். தொடர்ந்து கூடலூர் வன கோட்ட அலுவலர் ஓம்காரம் உத்தரவின்படி, பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன், வன காப்பாளர் மில்டன் பிரபு மற்றும் வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்