ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2023-06-03 18:55 GMT

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தி.மு.க. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு தி.மு.க.வினர் மவுன அஞ்சலி செலுத்தினர். இரவில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்