சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து - 4 பேர் உயிரிழப்பு

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.;

Update:2023-11-13 10:12 IST

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். முன்னதாக பங்களா புதூர் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் வந்துவிட்டு திரும்பும்போது வேடசின்னூர் பஸ் ஸ்டாண்டு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த இருவர் கோபிசெட்டிப்பாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரில் பயணித்த அனைவரும் மது போதையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்