இரு தரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்கு

காவேரிப்பட்டணம் அருகே மாடு கட்டியதில் தகராறு: இரு தரப்பினர் மோதலில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update:2022-05-26 18:56 IST

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள கருக்கன்சாவடியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவரது வீட்டருகே காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான மாட்டு பண்ணை உள்ளது. இவர்கள் இருவரின் நிலங்களுக்கு நடுவில் சுற்றுச்சுவர் எழுப்புவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ஜாகிர் உசேன் பண்ணையில் இருக்கும் மாடுகளை பிரச்சினைக்குரிய நிலத்தில் கட்டியுள்ளார். இதை அருண்குமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதி கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ஜாகிர் உசேன் (46), அருண்குமார், காளியப்பன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்