4 பேர் மீது வழக்கு

முத்தையாபுரத்தில் கணவன்- மனைவியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு;

Update:2022-05-31 23:26 IST

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன். இவரது மகன் முத்துலிங்கம் (வயது 34). கடை வைத்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய ‌நண்பர் அதே‌ பகுதியை சேர்ந்த அஜித்குமார். இவர் கம்பி வெட்டும் எந்திரம் வாங்கி சென்றுள்ளார். இதனை பலமுறை முத்துலிங்கம் திருப்பி கேட்டும் அஜித்குமார் கொடுக்காததாகக் கூறப்படுகிறது. இதனால் முத்துலிங்கம் அஜித்குமாரின் தாயாரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், பாலமுருகன், பாலகிருஷ்ணன், அங்கம்மாள் ஆகிய 4 பேர் சேர்ந்து முத்துலிங்கம் மற்றும் அவருடைய மனைவி ஜெபக்கனியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்