விவசாயியை தாக்கிய 4 போ் மீது வழக்கு
திருக்கோவிலூர் அருகே விவசாயியை தாக்கிய 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள மேலத்தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் முருகன்(வயது 57). அதே ஊரை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மகாலிங்கம். உறவினர்களான இவர்கள் இருவருக்கிடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை முற்றியதால் ஆத்திரமடைந்த மகாலிங்கம், மகேந்திரன், சங்கர் மற்றும் வேல்முருகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து வெற்றிவேல்முருகன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மாட்டு தீவன பயிரை சேதப்படுத்தியதோடு, தட்டி கேட்ட அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து வெற்றிவேல் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மகாலிங்கம் உள்பட 4 பேர் மீதும் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.