விருத்தாசலத்தில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி

விருத்தாசலத்தில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

Update: 2023-08-11 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க விளையாட்டு போட்டி நடந்தது. இதில் விருத்தாசலம் குறுவட்டத்திற்குட்பட்ட 55 அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியானது 11, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என தனித்தனி பிரிவாக நடந்தது. அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் ஐந்து சுற்றுகளாக பங்கேற்றனர். 14 வயதுக்குட்பட்டோர் பிரிவினருக்கு மட்டும் 7 சுற்றுகளாக நடந்தது. இந்த போட்டியை கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த சதுரங்க போட்டியில் உடற்கல்வி இயக்குனர்கள் நர்மதா, கிருஷ்ணவேணி, மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ஜெயராஜ், ராஜராஜசோழன், பிரகாசம், தியாகு, வாசு, கண்ணன் நடுவராக பங்கேற்றனர். போட்டியின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் முதல் 3 இடத்தை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்