உலக முதியோர் தின விழா கொண்டாட்டம்

உலக முதியோர் தின விழா கொண்டாட்டப்பட்டது.;

Update:2023-10-15 00:27 IST

கரூர் வெண்ணைமலையில் உள்ள அன்பு கரங்கள் ஆதரவற்றோர் தொண்டு மையத்தில் உலக முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. அன்புகரங்கள் செயலாளர் சேகர் வரவேற்று பேசினார். மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சிவசங்கரி தலைமை தாங்கி, கேக் வெட்டி முதியோர்களுக்கு வழங்கி ேபசினார். அப்போது அவர் கூறுகையில், இன்றைய நவீன உலகில் முதியோர்களை பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் சரியாக பராமரிப்பது இல்லை. இதனால் உலகம் முழுவதும் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகிறது. முதியோர்களை பேணி காத்திட உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. முதியோர்கள் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். பெற்றோர்களை நாம் பேணி காத்தால் மட்டுமே வரும் காலங்களில் நம் பிள்ளைகள் நம்மை பேணி காப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், என்றார். இதில் முதியோர்கள் ஆனந்தமாக பாடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்