பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பணகுடியில் பெண்ணிடம் சங்கிலியை மர்மநபர் பறித்துச் சென்றார்.;

Update:2023-05-22 00:22 IST

பணகுடி:

பணகுடியை அடுத்த சிவகாமிபுரத்தை சேர்ந்த ராஜன் என்பவருடைய மனைவி விமலா (வயது 45) தோட்டப்பகுதிகளில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் வழக்கம்போல் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முகவரி கேட்பது போல் பேசி அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்