தொண்டி அரசு பள்ளி மாணவிகள் தகுதி

மாநில அளவிலான கலைத்திருவிழாவில் பங்கேற்க தொண்டி அரசு பள்ளி மாணவிகள் தகுதி பெற்றுள்ளது.

Update: 2022-12-17 18:45 GMT

தொண்டி, 

தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் கலந்து கொண்டனர். அங்கு நடைபெற்ற குழு நடனப்போட்டியில் இந்த பள்ளியில் பிளஸ்-2 மாணவிகள் டெல்பியா, அபிநயா, முனீஸ்வரி, நாகவேணி, அபர்ணா, அகல்யா, செல்சியா, ரிதன்யா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். இதேபோல் தனி நடனப்போட்டியில் மாணவி தீபிகா கரகம் ஆடி முதல் பரிசு பெற்றுள்ளார். குழு நடனம் மற்றும் தனிநபர் நடன போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்த மாணவிகள் சென்னையில் மாநில அளவில் நடைபெற உள்ள கலைத்திருவிழாவில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். போட்டிகளில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை அருணா செல்வி, உதவி தலைமை ஆசிரியை காஞ்சனா மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழுவினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்