சேத்துப்பட்டில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை சந்தை
சேத்துப்பட்டில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை சந்தை மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை சந்தையை ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜூனன் தொடங்கி வைத்தார்.;
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை சந்தை
cசேத்துப்பட்டு நகரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வாங்குபவர் விற்போர் சந்திப்ப நடந்தது. இதனை வட்டார இயக்க மேலாண்மை அலகு நடத்தியது. இதில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியததை சேர்ந்த 47 கிராமத்தில் இருந்தும், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 57 கிராமத்தில் இருந்தும் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை செய்ய 198 வகையான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட இயக்குனர் சையது சுலைமான் தலைமை தாங்கினார். உதவி திட்ட இயக்குனர் ஜான்சன் முன்னிலை வகித்தார். அனைவரையும் சேத்துப்பட்டு வாழ்வாதார இயக்க மேலாளர் மஞ்சுளா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன், கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
ஒன்றிய மகளிர் அணி குழுக்கள் உற்பத்தி செய்யும் சமையல் எண்ணெய் வகைகள், கூடைகள், பட்டுப் புடவை, லுங்கிகள், மசாலா பொருட்கள், ரசப்பொடி மிளகாய் பொடி, மல்லிப்பொடி அரைத்த கோதுமை மாவு, சோப் பவுடர், அரிசி வகைகள், காய்கறிகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருநற்தன.
இதில் சேத்துப்பட்டு ஒன்றிய குழு துணை தலைவர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.