குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

வாணாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-09-05 17:49 GMT

வாணாபுரம்

வாணாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

வாணாபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமணத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கலந்துகொண்டு பேசினார்.

18 வயதிற்கு உட்பட்டவராக இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறுவது குற்றமாகும். மேலும் சுற்றுவட்டார பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றால் உடனடியாக போலீஸ் நிலையம், பெண் குழந்தை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இதில் போலீஸ்காரர்கள் அம்மு, சகாயராணி, தனிப்பிரிவு போலீசார் ராமராஜன் மற்றும் குழந்தை நல அலுவலர் அசோக் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்