குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
பாலமேடு பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;
அலங்காநல்லூர்,
பாலமேடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் சுமதிபாண்டியராஜன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் தேவி, துணைத்தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது, குழந்தை திருமணத்தை நிறுத்துவது, ஆதரவற்ற குழந்தைகள் படிப்பை மேம்படுத்துதல். பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் கிரண்குமார் நன்றி கூறினார்.