ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் துப்புரவு பணி
கலவையில் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் துப்புரவு பணி நடைபெற்றது.;
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவரும், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகனுமான கோ.ப.அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு கலவை அரசு மருத்துவமனை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் துப்புரவு பணி நடைபெற்றது.
கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது சாதிக் தலைமையில், டாக்டர் பிரகதீஸ்வரர் முன்னிலையில் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தினர், செவ்வாடை தொண்டர்கள் அங்கிருந்த செடி, கொடிகளை வெட்டி அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் குப்பைகளையும் அகற்றினார்கள். இதில் டாக்டர் சதீஷ்குமார், சமூகத்தொண்டு ஆர்வலர் லைன் மணி, மருத்துவக் குழு தலைவர் தியாகராஜன் மற்றும் செவ்வாடைதொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.