கோவை கார் வெடிப்பு சம்பவம்: கவர்னர் பொறுப்பற்ற வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் - திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்

கவர்னர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-10-30 04:35 GMT

சென்னை,

கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து பேசினார்.

அப்போது இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்றும், வழக்கு விசாரணை தாமதமாக என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூட்டணி கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கவர்னர் பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற வகையில் ஆர்.என்.ரவி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

தமிழக கவர்னர் ரவி பதவி விலகிவிட்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசட்டும்.

தமிழகத்தில் கவர்னர் குழப்பதை ஏற்படுத்த முயற்ச்சிக்கிறாரா?

பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பாஜக தலைமையை மகிழ்விக்கவே கவர்னர் விரும்பினால் அவர் பதவி விலக வேண்டும்.

கவர்னர் உதிர்க்கும் அபத்த கருத்துகளுக்கு எதிராக பலர் சொல்லும் விளக்கங்களை அவர் ஏற்றதாக தெரியவில்லை.

கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கே எதிரானது என்பதை உணர்ந்து தான் பேசுகிறாரா?

வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு கவர்னர் பேசுகிறார் என்றே பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறோம் என திமுகவின் டி.ஆர். பாலு, தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.க. ம.ம.க.ஐயூ எம் எல், கொ.மதே.க., த.வா.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்