கோவை: தனியார் பஸ் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து - 2 பேர் பலி

பொள்ளாச்சி அருகே தனியார் பஸ் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-09-28 07:39 GMT

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோபாலபுரத்தில் இருந்து இன்று காலை பொள்ளாச்சி நோக்கி தனியார் பஸ் வந்துக் கொண்டிருந்தது.

இந்த பஸ் ஐய்யம்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்