கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update:2022-07-20 22:05 IST

வடவள்ளி

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும், மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இறந்து போன மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது, இந்த விவகாரத்தில் தாமதம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்