`தினத்தந்தி' செய்தி எதிரொலி 40 கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் கலெக்டர் நடவடிக்கை

தினத்தந்தி செய்தி எதிரொலியாக கலெக்டர் உத்தரவின் பேரில் 40 கிராமங்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2023-06-01 18:45 GMT

தேவகோட்டை

தினத்தந்தி செய்தி எதிரொலியாக கலெக்டர் உத்தரவின்ே்பரில் 40 கிராமங்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

குடிநீர் பிரச்சினை

தேவகோட்டை அருகே உள்ள மருதவயல் கிராமத்தில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 40-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அடிக்கடி ஏற்பட்டு வந்த மின் பழுைத நாட்கள் கணக்கில் அகற்றாமல் இருந்து வந்தது. இதனால் அந்த பகுதி கிராம மக்கள் குடிநீருக்கு அவதிப்படுவதாக கடந்த 29-ந் தேதி தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மின்வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் தேவகோட்டை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் மற்றும் உதவி மின் பொறியாளர் செல்வம், டைட்டஸ் ஆகியோர் மருதவயல் கிராமத்திற்கு சென்றனர்.

நடவடிக்கை

பின்னர் அங்கு உள்ள டிரான்ஸ்பார்மரில் உடனடியாக புதிதாக மின் மாற்றி வைத்து உடனடியாக மின் வினியோகம் வழங்கினர். இதனால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தங்கு தடை இன்றி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மக்களின் நலன்கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டருக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்