வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
பள்ளிபாளையம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.;
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடக்கமாக கொக்கராயன்பேட்டை ஊராட்சியில் 50 தனிநபர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் தொட்டிகாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.