அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்.;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்! உறவுகளைப் பிரிந்து, ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன்!
செல்லும் வழியில், நேதாஜி சாலை நாராயணப்பதெருவில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோரைச் சந்தித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் அவர்களுக்குப் புதிய வீடுகளை வழங்கிட ஆணையிட்டுள்ளதைப் பகிர்ந்துகொண்டேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.