கலெக்டர்- சுகாதார இணை இயக்குனர் உள்பட 4 பேர் வழங்க வேண்டும்

அரசு ஊழியருக்கு மருத்துவம்-வழக்கு செலவு தொகையை கலெக்டர்- சுகாதார இணை இயக்குனர் உள்பட 4 பேர் வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-09 18:19 GMT

கொரடாச்சேரி:

அரசு ஊழியருக்கு மருத்துவம்-வழக்கு செலவு தொகையை கலெக்டர்- சுகாதார இணை இயக்குனர் உள்பட 4 பேர் வழங்க வேண்டும் என திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலுவலக உதவியாளர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உப்புகுளத்தெருவை சேர்ந்தவர் மகேந்திர பூபதி. இவர் திருத்துறைப்பூண்டியில் இயங்கி வரும் மாநில வரி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ந்தேதி தஞ்சையில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் முக்கிய கோப்புகளை ஒப்படைத்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கால் எலும்பு உடைந்தது

அப்போது மன்னார்குடியில் உள்ள ஒரு கழிவறையில் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு கால் தவறி விழுந்துள்ளார். இதில் அவரது வலது முழங்கால் மூட்டு எலும்பு உடைந்தது. உடனே அவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டு ரூ.48 ஆயிரம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனையடுத்து ஒரு மாத காலம் மருத்துவ விடுப்பில் இருந்த அவர், மருத்துவ காப்பீடு தொகை கேட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் மண்டல மேலாளர் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு மருத்துவ காப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

வழக்கு தொடர்ந்தார்

இதை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மகேந்திரபூபதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஆணையத்தலைவர்

சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, லட்சுமணன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பில் ஐகோர்ட்டு உத்தரவின்படி புகார்தாரர் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உறுப்பினராக இருப்பதாலும், தமிழ்நாடு மருத்துவ வருகை விதிகளின் படி புகார்தாரருக்கு மருத்துவ செலவுத்தொகை கிடைக்கக் கூடியது என இந்த ஆணையம் கருதுவதாலும் மருத்துவ செலவு செய்ததற்கான கொடுக்கப்பட்ட ஆவணங்களை கணக்கிட்டு மருத்துவ இழப்பீடு வழங்க வேண்டும். கூடுதலாக வழக்கு செலவிற்கு ரூ.3 ஆயிர வழங்க வேண்டும்.

கலெக்டர் உள்பட 4 பேர் வழங்க வேண்டும்

இந்த மருத்துவ செலவுக்கான தொகை மற்றும் வழக்கு செலவு தொகையை மாவட்ட கலெக்டர், மாவட்ட கருவூல அதிகாரி, மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன மண்டல மேலாளர் ஆகியோர் இணைந்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்