பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கலெக்டர் 'திடீர்' ஆய்வு

அரக்கோணம் ஜோதி நகர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-10 17:14 GMT

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தநிலையில் அரக்கோணம் ஜோதி நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தார்.

தொடர்ந்து சாலையோர கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை அவர் பறிமுதல் செய்தார். பின்னர், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து அங்கிருந்த கடைக்காரர்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அரக்கோணம் நகராட்சி ஆணையர் லதா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்