கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

ஆபாச படத்தை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான தனியார் நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்;

Update:2022-07-21 19:44 IST

கோவை

ஆபாச படத்தை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான தனியார் நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கல்லூரி மாணவி

ஈரோட்டை சேர்ந்த 24 வயது மாணவி, மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவர், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க சென்றார்.

அப்போது அவருக்கு கோவையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராஜ்குமார் (40) அறிமுகமானார். அவர் அந்த மாணவியி டம் தனக்கு 30 வயது என்றும் இன்னும் திருமணமாகவில்லை என்றும் கூறி உள்ளார்.

இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் இடையே நட்பு ஏற்பட்டதால் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.

புகைப்படம் எடுத்து மிரட்டல்

இந்த நிலையில் சென்னையில் இருந்தபோது அந்த மாணவி உடை மாற்றியதை அவருக்கு தெரியாமல் ராஜ்குமார், தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்து உள்ளார். பின்னர் அந்த ஆபாச படத்தை அந்த மாணவிக்கு அனுப்பி வைத்தார். அதை பார்த்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அந்த மாணவி, ராஜ்குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி அதை அழித்துவிடும்படி கூறினார். அப்போது சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தால் ஆபாச படத்தை அழித்து விடுவதாக அந்த மாணவியிடம் ராஜ்குமார் கூறி உள்ளார்.

பாலியல் பலாத்காரம்

அதை நம்பிய அந்த மாணவி, ராஜ்குமார் கூறிய அடுக்குமாடி குடியிருப்புக்குசென்றார். அவர், தனது ஆபாச புகைப்படத்தை அழித்துவிடுமாறு கூறி உள்ளார். ஆனால் ராஜ்குமார், ஆபாசபடத்தை அழிக்காமல் மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து அவர், அந்த மாணவியை குன்றத்தூரில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படம் எடுத்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த மாணவியை கோவைக்கு வரவழைத்து ராஜ் குமார் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த மாணவியிடம் வற்புறுத்தி உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்தல்

இந்த நிலையில் ராஜ்குமார் மீண்டும் அந்த மாணவியை கோவை கொடிசியா அருகே வரும்படி அழைத்து உள்ளார். அங்கு அந்த மாணவி, தனது ஆபாச புகைப்படங்களை அழித்துவிடும்படி கேட்டு உள்ளார்.

அதற்கு அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தால் ஆபாச புகைப்படத்தை அழித்து விடுவதாக ராஜ் குமார் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், அந்த மாணவியை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கியதாக ெதரிகிறது.

வலைவீச்சு

இது குறித்து அந்த மாணவி பீளமேடு போலீசில் புகார் செய் தார். இது பலாத்கார வழக்கு என்பதால் ராமநாதபுரம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

போலீசார் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. ராஜ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்