கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

வேலூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.;

Update:2023-09-30 00:00 IST

வேலூர் டவுன் ஹாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) சுஜாதா வரவேற்றார். 100 கர்ப்பிணிகளுக்கு புடவை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைகள் வழங்கி வாழ்த்தினர். மேலும் அவர்களுக்கு 5 வகையான சத்தான உணவுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், உதவி கமிஷனர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்