தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:;

Update:2023-03-16 03:00 IST

பயணிகள் சிரமம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டிக்கு குறைந்த அளவு அரசு பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து பயணிப்பதால் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெகநாதன், சோழவந்தான், மதுரை.

தெரு விளக்குகள் சரிசெய்யப்படுமா?

மதுரை எஸ்.ஆலங்குளம் எஸ்.வி.பி. நகர் 4-வது தெருவில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துகாளை, எஸ்.ஆலங்குளம், மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை குருவிக்காரன் சாலை மேம்பாலத்தில், நான்குபுறங்களிலிருந்தும் வாகனங்கள் வேகமாக குறுக்கே திரும்புகின்றன. இதனால் இங்கு விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அன்புமணி, மதிச்சியம், மதுரை.

நாய்கள் தொல்லை

மதுரை மாநகராட்சி 23-வது வார்டு தாகூர் நகர் பகுதியில் நாய்கள் அதிகமாக திரிகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். இந்த நாய்கள் வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தெரு நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சந்தனகுமார், மதுரை.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் வாய்க்கால் சாலை வழியாக அழகர்கோவில் செல்லும் மெயின் சாலையில் குண்டும்,குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், மேலூர், மதுரை

Tags:    

மேலும் செய்திகள்