விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-07-21 00:15 IST

சிவகங்கையில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சிவகங்கை நகர் கழக செயலாளர் என்.எம்.ராஜா வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தினசரி வழிப்பறி, கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் விலைவாசியும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.10-க்கு விற்பனையான தக்காளி இன்று ரூ.150 இருந்து ரூ.200 வரை விற்பனையாகிறது. இதேபோன்று பூண்டு, வெங்காயம் போன்றவற்றின் விலையும் உயர்ந்து உள்ளது. இவற்றை பற்றி தி.மு.க. அரசு கவலைப்படுவதே கிடையாது. ஒரு அமைச்சர் கூறுகிறார் காலையில் குடிப்பவர்களை குடிகாரர் என்றால் நான் பொறுத்து கொள்ள மாட்டேன் என்கிறார். மதுக்கடைகளை முன்கூட்டியே திறக்கலாமா என்று ஆலோசிக்கிறோம் என்கிறார். இந்த ஆட்சியில் மக்கள் படும் துயரங்களை கூறமுடியாத அளவுக்கு உள்ளது. விரைவில் இந்த ஆட்சியை அகற்றி அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஏ.வி.நாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர்கள் கோமதி தேவராஜ், பில்லூர் ராமசாமி, கொத்தங்குளம் கருப்பையா, அழகுமலை முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன் சேவியர்தாஸ், கோபி, செல்வமணி, பழனிசாமி, பாரதிராஜா, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் தேவதாஸ், தலைமை கழக பேச்சாளர் மணிமுரசு, தேவகோட்டை நகர செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ் குமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் புவனேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாபு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் நவநீதன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் புதுப்பட்டி சிவா, சிவகங்கை நகர் துணை செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்