பல்கலைக்கழக பேராசிரியர்களிடையே மோதல்:விசாரணை குழு அமைப்பு

பல்கலைக்கழக பேராசிரியர்களிடையே மோதல் சம்பவத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.;

Update:2023-08-19 02:53 IST


மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்கள் கபிலன் மற்றும் செந்தாமரைக்கண்ணன் கடந்த 15-ந் தேதி கல்லூரி வளாகத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், பல்கலைக்கழக நிர்வாகப்பணியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் மூட்டா ஆகிய சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரியின் முதல்வர் புவனேசுவரன் பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் வழங்கியிருந்தார். இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து நேற்று நடந்த பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர்கள் மோதல் விவகாரம் குறித்து விசாரிக்க 3 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் புஷ்பராஜ், நாகரத்தினம், தவமணி கிறிஸ்டோபர் ஆகியோர் கொண்ட குழுவுக்கு புஷ்பராஜ் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவினர், விசாரணை அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் ஆட்சிமன்றக்குழு உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்