கின்னஸ் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

96 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர்.

Update: 2022-06-05 15:02 GMT

உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்காக 96 மணி நேரம் இடைவிடாமல் ஸ்கேட்டிங் போட்டி கர்நாடகா மாநிலம், பெல்காம் நகரில் கடந்த மே 28-ந்தேதி முதல் ஜூன் 3-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவை மற்றும் பல மாநிலங்களில் இருந்து 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் ராஜன் உள் விளையாட்டரங்கில் பயிற்சிப் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அகிலன், ஆதவன், ஜெயசூர்யா, பாலதன்வந்த், ஹரி கோவிந்தன், கார்த்திக் நரேன், மோனிஷ், கார்த்திகேயா, நாகராஜன், சுதர்ஷனகானீஸ் ஆகிய 11 மாணவர்கள் கலந்து கொண்டு 96 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து உலக சாதனையில் இடம் பிடித்தனர். சாதனை படைத்த மாணவர்கள் நேற்று காலை சின்னாளப்பட்டி வந்தனர். அவர்களை அணியின் மேலாளரும், ஸ்கேட்டிங் போட்டி சர்வதேச நடுவருமான பிரேம்நாத் தலைமையில் பெற்றோர்கள் உள்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்