காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்;

Update:2023-07-08 02:45 IST

பொள்ளாச்சி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் நேற்று கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்