காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
பந்தலூர்
மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதியை நிலை நாட்டவும் வலியுறுத்தி நெல்லியாளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பந்தலூர் அருகே தேவாலாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லியாளம் நகர தலைவர் ஷாஜி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் கலவரத்தை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், நிர்வாகிகள் அனீஷ், பிரபு, ஜோணி, வின்சன்ட், சவுக்கத், சந்திரன், ஹரீஷ் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.