வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

புளியம்பட்டி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-14 18:05 GMT

கிருஷ்ணகிரி:

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டியில் ஆர்ய வைசிய குல தெய்வமான வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி யாகசாலை பூஜை, கோ பூஜை, அம்மனுக்கு தசமுக தரிசனம், நாடிசந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து கணபதி, நவக்கிரஹ ஹோமம், அம்மன் நாமத்திரிய ஆஸ்வதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது. பின்னர் செல்வகணபதி, செல்வமுருகன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோபுரம், நவகிரகம், பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

அன்னதானம்

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சதாஷ்ட (108) மஞ்சள் பிள்ளையார் செய்யும் வைபவம், சக்ர வாசவி மகிளா குழுவினரால் குத்து விளக்கு பூஜை, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் உற்சவர் திருவீதி உலா நடந்தது.

இந்த விழாவில் எஸ்.கே.பி. ஜூவல் மார்ட் எஸ்.கே.பி.தேவராஜன், டி.ஜெகதீஸ், எஸ்.கே.பி. ஜூவல்லர்ஸ் எஸ்.கோகுல் ஸ்ரீனிவாசா, போச்சம்பள்ளி எஸ்.கமலேஷ், பாஸ்கர் ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் ஜி.கிருஷ்ணன், ஜி.கே.தருண், மேலாளர் பழனி, மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி மற்றும் போச்சம்பள்ளி ஆர்ய வைஸ்ய பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்