கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
சிவகங்கை அடுத்த நாட்டரசன் கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 16-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 20-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலையில் 6-ம் கால யாக பூஜைகள், பரிவார யாகசாலை பூஜைகள் முடிந்தன. பின்பு யாக சாலையில் பூஜை செய்த குடங்களை எடுத்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ராஜகோபுரம், மூல விமானம் பரிவார விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பழனி குமார், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, உதவி ஆணையாளர் செல்வராஜ், கோவில் கண்காணிப்பாளர் சரவணன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் செட்டியார், திருப்பணி தலைவர் அண்ணாமலை, உப தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் லட்சுமணன் உதவி செயலாளர் இளங்கோவன், பொருளாளர் சொக்கலிங்கம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவு தங்கரதத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார்.