போலி மதவாதத்தைதான் எதிர்க்கிறோம் - தமிழிசை சவுந்தரராஜன்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உறுதிமொழிக்கு எதிராக செயலாற்றுகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.;

Update:2025-12-21 20:10 IST

சென்னை,

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்காக எதிராக ஒருபுறம் சட்ட ரீதியாக போராடி வருகிறோம். மதசார்பின்மை என்ற சொல்லை கேட்டாலே மத்திய பாஜக அரசுக்கு வேப்பங்காய் போல கசக்கிறது. மதசார்பின்மை என்ற சொல்லை அரசமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க மத்திய பாஜக அரசு துடிக்கிறது. பாஜகவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும்தன்மை தமிழ்நாட்டுக்கும் திமுகவுக்கும் உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

இந்தநிலையில், எஸ்.ஐ.ஆர் குறித்த முதல்-அமைச்சர் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உறுதிமொழிக்கு எதிராக செயலாற்றுகிறார். சிறுபான்மையினருக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் வழங்க மாட்டோம் என்று அதிகாரிகள் சொன்னார்களா? சிறுபான்மையினர் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதா? இந்துமத தலைவர்கள் இந்துகளுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னால், அது மதவாதம். ஆனால் வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று சொன்னால், அது மதவாதம் இல்லை. இந்த போலி மதவாதத்தைதான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்