பைபிள், குரான், திருவாசகம் வாசித்து பிரார்த்தனை; காரைக்குடியில் நல்லிணக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
மும்மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தூய சகாய மாதா ஆலயத்தில் மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையின்போது திருவாசகம் பாடப்பட்டு, குரான் ஓதப்பட்டு, பைபிள் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து மும்மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அனைத்து மத பிரமுகர்களும் பங்கேற்ற இந்த மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.