கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

விழுப்புரத்தில் கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-07-14 18:45 GMT

விழுப்புரம்:

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் என்ற அண்ணாதுரை தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஜெகதீசன் தொடக்க உரையாற்றினார். கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவரும் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் தலைவருமான பொன்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், குமார், மணிகண்டன், கார்த்தி, ஏழுமலை, தரணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மணல் குவாரிகளை திறப்பதற்கு எதிராக பெறப்பட்ட தடை ஆணையை நீக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டா வழங்குவதில் நீண்ட கால தாமதமும் பல்வேறு பிரச்சினைகளும் நிலவி வருவதால் மாவட்ட கலெக்டர் நேரடியாக இதில் தலையிட்டு சரியான இடங்களுக்கு பட்டாக்களை விரைந்து வழங்க வேண்டும், கடலூரில் நடைபெற உள்ள கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் கூட்டமைப்பின் 2-வது மாநில மாநாட்டில் விழுப்புரத்தில் இருந்து திரளாக கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பை மாவட்ட அளவில் விரிவுப்படுத்துவதற்கு தொகுதி வாரியாகவும், ஒன்றிய வாரியாகவும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்