சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிாிழந்தாா்.

Update: 2023-10-03 18:45 GMT

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அருகே உள்ள குச்சிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி பெண்கள் விடுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, துளையிடும் எந்திரத்தை பயன்படுத்திவிட்டு, அதன் பிளக்கை எடுக்க முயற்சித்த, அவரை மின்சாரம் தாக்கியது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அண்ணாமலை நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்