ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம்

பழனி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் பழனி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

Update: 2022-07-12 14:09 GMT

பழனி பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். பழனி ஆர்.டி.ஓ. சிவகுமார் மற்றும் நகராட்சி ஆணையர் கமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில், பழனி பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறுவது குறித்தும், கட்டண கழிவறை மற்றும் இலவச கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, பஸ்நிலையத்திற்குள் பஸ்கள், வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்துவது, பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்துவது, பஸ்நிலையத்தில் தங்கி உள்ள ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர்களை காப்பகத்திற்கு அனுப்பி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன், போலீஸ் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்