பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு

பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-06-10 18:45 GMT

பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி வாகனங்கள்

தமிழக அரசு பள்ளி வாகனங்களை இயக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கட்டுப்பாடு விதித்து உள்ளது. இதற்கென சிறப்பு விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது. அந்த விதிகளை கடைபிடித்து பள்ளி வாகனங்களை இயக்க ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி வாகனங்களை தினமும் முழுமையாக பரிசோதித்து, முறையாக பராமரித்து இயக்க வேண்டும்.

இதனை தனியார் பள்ளி வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர், நடத்துனர்கள் உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி வாகன நடத்துனர்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இறங்கி செல்வதை கண்காணிக்க வேண்டும்.

விபத்தில்லாமல்

மேலும், பள்ளி வாகனங்கள் நகர எல்லையில் 40 கி.மீ. வேகத்தில், பிற அனுமதிக்கப்பட்ட சாலைகளில் 50 கி.மீ. வேகத்தில் மட்டும் இயக்க வேண்டும். பள்ளிகள் திறப்பையொட்டி அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து சான்று அளிக்கப்பட்டு உள்ளது. சரியாக உள்ள பள்ளி வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் அனுமதி ஸ்டிக்கரை ஒட்டி வைக்க வேண்டும்.

சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து விபத்தில்லாமல் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்