கோனேரிப்பட்டியில் ரூ.27 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கோனேரிப்பட்டியில் ரூ.27 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.;

Update:2023-09-02 01:46 IST

தேவூர்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் கோனேரிப்பட்டி கிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் கோனேரிப்பட்டி, தேவூர், குருவரெட்டியூர், குள்ளம்பட்டி, செங்கானூர், பூமணியூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணித்தாசனூர் கொட்டாயூர். நல்லதங்கியூர். கல்வடங்கம். சென்றாயனூர், ஒடசக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.6,060 முதல் ரூ.7,299 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ.4,100 முதல் ரூ.5,599 வரையிலும் ஏலம் நடந்தது. மொத்தம் 1,250 பருத்தி மூட்டைகள் ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்