தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு - நாளை முதல் தொடங்கி நடக்கிறது

Update: 2023-06-17 19:00 GMT

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 2023-2024-ம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடக்கிறது. நாளை காலை 10 மணி முதல் நடக்கும் கலந்தாய்வில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்றார்போல் சேர்க்கை நடைபெறும்.

நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.சி.(ஏ) ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் காலியாக உள்ள இடங்களுக்கு தேவைக்கு ஏற்றார்போல் அழைத்து மாணவர் சேர்க்கை நடைபெறும்.

21-ந் தேதி இனவாரியான காலியிடங்கள் மற்றும் பொது கல்வி பாடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தொழிற்கல்வி மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் விரவல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மாணவர் சேர்க்கையின் போது மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவம், மாற்று சான்றிதழ், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசலை கொண்டு வர வேண்டும். இதேபோல் வங்கி கணக்கு புத்தக நகல், 6 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்