கடமலை-மயிலை ஒன்றியத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-05-31 21:00 GMT

மயிலாடும்பாறை அருகே பொன்னன்பொடுகை கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோட்டத்து வீட்டில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததாக சின்னன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் வருசநாடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள், சந்தேகப்படும் பகுதிகளில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று வருசநாடு அருகே பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடைபெற்ற ரோந்து பணியில் கள்ளச்சாராயம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும் இந்த ரோந்து பணி தொடரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்